
கோலாலம்பூர் மே 22-
வரும் ஜூலை மாதம் 2 ஆம் தேதி மிகப்பெரிய அளவில் தேசிய வர்த்தக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷணண் தெரிவித்தார்.
தேசிய வர்த்தக தொழில் துறை கருத்தரங்கு கேஎல்சிசி Conversation Center இல் ஜூலை 2 ஆம் தேதி நடைபெறும் இந்த மாபெரும் கருத்தரங்கில் 500 பேராளர்கள் கலந்து கொள்கிறார்கள்.
துணை பிரதமர் Datuk Amar Haji Fadilah Yusof
இந்த தேசிய வர்த்தக கருத்தரங்கை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த கருத்தரங்கில் வணிகத் தலைவர்கள், தொழில் முனைவோர், பொருளாதார வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் பெரும் அளவில் கலந்து கொள்கிறார்கள்.
சீர்குலைவு நிறைந்த காலகட்டத்தில் மலேசியாவின் பொருளாதார எதிர்காலத்தைப் பாதுகாக்கும் உலகளாவிய மாற்றம் என்ற கருப்பொருளில் இந்த வர்த்தக கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று டத்தோஸ்ரீ கோபாலகிருஷ்ணன் கூறினார்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை அமைச்சர் ஸ்டீபன் சிம், தோட்டத் தொழில் மூலத் தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி மற்றும் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் ஆகியோர் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கலந்து கொள்ளும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று அவர் சொன்னார்.
இதனிடையே இந்த வர்த்தக கருத்தரங்கில் ஏராளமான இந்திய தொழில் முனைவோர், வர்த்தகர்கள் கலந்து கொண்டு பயன் அடையும்மாறு மலேசிய தேசிய வர்த்தக தொழில் சம்மேளனத்தின் உதவித் தலைவர் டத்தோ டாக்டர் குமாரராஜா கேட்டுக் கொண்டார்.
அனைத்து இனங்களையும் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகர்கள் இதில் கலந்து கொள்வதால் அவர்களுடன் புதிய தொழில் தொடங்குவதற்கு இது ஒரு பாலமாக அமையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்
மலேசிய தேசிய வர்த்தக தொழில் துறை சம்மேளனத்தின் தேசிய தலைவர் டத்தோஸ்ரீ என்.கோபால கிருஷ்ணன் ,
தேசிய உதவித் தலைவர் டத்தோ டாக்டர் ஏ டி.குமரராஜா, தேசிய தலைமை செயலாளர் ஞானசம்பந்தன் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் இந்த வர்த்தக கருத்தரங்கு தொடர்பாக டத்தோ டாக்டர் குமாரராஜா 012-38309009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

