ம இகாவின் 80 ஆம் ஆண்டை முன்னிட்டு கூட்டு பிரார்த்தனை கூட்டம் விமரிசையாக நடைபெற்றது!

கோலாலம்பூர் மே 22-
மஇகா என்பதாம் ஆண்டில் பயணிப்பதை முன்னிட்டு நேற்று மே 21ஆம் நாள் நாடு முழுவதும் ஏராளமான இடங்களில் மஇகா சார்பில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

அந்த வகையில், மஇகா தேசிய தலைமையகத்தின் சார்பில் மஇகா முதன் முதலில் 1946-இல் எந்த இடத்தில் தொடங்கப்பட்டதோ அதே இடத்தில் மஇகா தேசியத் தலைவர் தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையில் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது.

மஇகா தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ மு சரவணன், தேசிய உதவித் தலைவர்களான டத்தோ அசோகன், டத்தோ முருகையா மாநில தலைவர் தான்ஸ்ரீ இராமசாமி, முன்னாள் உதவி தலைவர்களில் ஒருவரான தான்ஸ்ரீ க. குமரன், பொதுச்செயலாளர் டத்தோ ஆனந்தன், நிர்வாக செயலாளர் டத்தோ டாக்டர் ஏ டி குமார ராஜா, தேசிய ஊடகப்பிரிவு தலைவர் எல் சிவசுப்பிரமணியன் மற்றும் மக்கள் சக்தி கட்சியின் தலைவர் டத்தோஸ்ரீ தனேந்திரன் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களும் கட்சியினரும் கோலாலம்பூர் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் ஒன்று கூடினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles