செந்தூல் காளியம்மன் கோவிலுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 50,000 வெள்ளி மானியம்!

மா.பவளம்

கோலாலம்பூர் மே 22-
நாட்டில் மிகவும் பிரபலமான செந்தூல் அருள்மிகு ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலுக்கு பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் அவர்கள் 50,000 வெள்ளி மானியம் வழங்கி பேருதவி புரிந்தார்.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் செந்தூல் காளியம்மன் கோவில் திருவிழா மிகப் பெரிய அளவில் நடைபெறும்

இரண்டு தினங்கள் நடைபெறும் திருவிழாவில் பத்தாயிரக்கும் மேற்பட்ட பக்தர்கள் காவடிகள் பால் குடங்கள் ஏந்தி காணிக்கை செலுத்துவார்கள்.

தற்போது செந்தூல் காளியம்மன் கோவில் பல லட்சம் வெள்ளியில் கட்டப்பட்டு வருகிறது.

கட்டுமான திருப்பணிக்கு உதவும் வகையில் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் 50,000 வெள்ளி வழங்கினார்.

இன்றிரவு கோவிலுக்கு நேரடி வருகை தந்த அவர், 50,000 வெள்ளி மானியம் காசோலையை கோவில் நிர்வாகத்திடம் வழங்கினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles