
அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்காக உள்ளூர் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யும் முதலாளிகளுக்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று மனிதவள அமைச்சர் வ.சிவக்குமார் இன்று மிக கடுமையாக எச்சரித்தார்.
நாட்டில் நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் உள்ளூர் தொழிலாளர்களை நீக்கிவிட்டு அன்னிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்திக் கொள்வது கண்டுபிடிக்கப்பட்டால் மனிதவள அமைச்சு கடும் நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் எச்சரித்தார்.
அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு ஏதுவாக பினாங்கு மாநிலத்தில் உள்ள நிறுவனம் ஒன்று 100க்கும் மேற்பட்ட உள்ளுர் தொழிலாளர்களை நீக்கி புகார்கள் எழுந்துள்ளன.
இது தொடர்பில் கருத்துரைத்த மனித வள அமைச்சர் சிவகுமார் இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடும் முதலாளிகளுக்கு 50,000 வெள்ளி அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்தார்..

