டத்தோஸ்ரீ உத்தமா தெங்கு ஸஃப்ருலை பண்டான் கெஅடிலான் நிராகவில்லை!

கோலாலம்பூர் ஜூன் 24-
பார்ட்டி கெஅடிலான் ரக்யாட் (PKR) பண்டான் கிளை சார்பில், பண்டான் அடிமட்ட உறுப்பினர்கள் YM டத்தோஸ்ரீ உத்தமா தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸீஸ் அவர்களை ஆதரிக்கவில்லை என்ற குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறோம்.

முன்னாள் பண்டான் கிளை நிர்வாகச் செயலாளரான திரு. கோக் கூன் முன் மற்றும் முன்னாள் தொடர்பு குழு இயக்குநரான அஸிலா யியோப் ஆகியோர் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து உண்மைக்குப் புறம்பானது.

மேலும், அது பண்டான் PKR அடிமட்ட உறுப்பினர்களின் உண்மையான நிலைப்பாட்டையும் பிரதிபலிப்பதில்லை.

நான், விக்னேஸ்வரன் ஜெயராமன், பண்டான் PKR கிளைத் தலைவராக, இந்தக் குற்றச்சாட்டிற்கான ஆதாரமும் அடிப்படையும் என்ன என்பதை கேள்வி எழுப்புகிறேன்.

இதுவரை அந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. மாறாக, பண்டான் கிளையின் தலைமைத்துவமும் கட்சி இயந்திரமும், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலில் (PRU16) P100 பண்டான் நாடாளுமன்றத் தொகுதிக்கான சாத்தியமான வேட்பாளராக YM டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸீஸ் அவர்களுக்கு முழுமையான ஆதரவைத் தொடர்ந்து வழங்கி வருகிறேன்.

கடந்த 2026 ஜூன் 11ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு 8.30 மணிக்கு, PKR பண்டான் கிளை, மாநிலத் தலைமையுடன் சிறப்புக் கூட்டம் ஒன்றை நடத்தியது.

அந்தக் கூட்டத்தில், மாநில PKR துணைத் தலைவரான YB டத்தோஸ்ரீ போர்ஹான் பின் அமான் ஷா அவர்களின் முன்னிலையில், பண்டான் கிளையின் தலைமை அமைப்பு மேலும் வலுப்படுத்தப்பட்டதுடன், முக்கியப் பொறுப்புகளுக்கான மறுநியமனங்களும் உறுதிசெய்யப்பட்டன.

அதனைத் தொடர்ந்து, 2026 ஜூன் 15ஆம் தேதி கோக் கூன் முன் மற்றொரு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியில் பங்கேற்று, அந்தக் கட்சியின் உடையை அணிந்திருந்தது காணப்பட்டது.

இந்த அறிக்கையை வெளியிட்டுள்ள சம்பந்தப்பட்ட நபர்கள், வேறு அரசியல் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக ஒழுங்கு நடவடிக்கை தொடர்பான செயல்முறையில் தற்போது உள்ளனர்.

அவர்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதற்கான தகவல்களும் ஆதாரங்களும் பண்டான் கிளையிடம் உள்ளன.

அதேவேளையில், சமீபத்திய ஊடகச் செய்திகளில் பண்டான் PKR அடிமட்ட உறுப்பினர்களின் குரலாக சித்தரிக்கப்பட்ட “Keluarga Keadilan” என்ற WhatsApp குழு, அதன் நிர்வாகியாக இருந்த சம்பந்தப்பட்ட நபரால் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. கட்சிக்கு தொடர்ந்து விசுவாசமாக இருந்த உறுப்பினர்கள் அந்தக் குழுவிலிருந்து தடுக்கப்பட்டோ அல்லது நீக்கப்பட்டோ உள்ளனர். இதன் விளைவாக, அந்தக் குழு இனி PKR பண்டான் கிளை உறுப்பினர்களின் உண்மையான கருத்துகளை பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை.

உண்மையில், PKR பண்டான் கிளை இன்னும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. புதிய கிளைத் தலைமையின் கீழ் அது மறுசீரமைக்கப்பட்டுள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற பெரும்பாலான செயற்குழு உறுப்பினர்கள் இன்னும் கட்சியுடன் விசுவாசமாக உள்ளனர். மேலும், ரோசியா பிந்தி ரம்லி தலைமையிலான வனிதா கெஅடிலான் மற்றும் மோஹ்ட் இஃப்வாட் தலைமையிலான AMK பண்டான் ஆகிய கட்சி பிரிவுகளும் பண்டான் மக்களுக்கான பல்வேறு மக்கள் சேவை நடவடிக்கைகளை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றன.

PKR பண்டான் கிளை உறுதியாகவும், ஒழுங்காகவும், கட்சியை வலுப்படுத்துவதற்கும் மக்களுக்கு சேவையாற்றுவதற்கும் முழுமையாக அர்ப்பணிப்புடன் தொடர்கிறது. எங்களின் முக்கிய நோக்கம் மக்களுடன் தொடர்ந்து நெருக்கமாகச் செயல்படுவதும், வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை முன்னிட்டு கட்சியின் தயார்நிலையை மேலும் வலுப்படுத்துவதுமாகும்.

விக்னேஸ்வரன் ஜெயராமன்
PKR பண்டான் கிளைத் தலைவர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles