

அழகிய பங்கோர் தீவில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நாளை மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
நூறு ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த கோவில் திருவிழாவில் நாடு தழுவிய அளவில் பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் பங்கோர்
பத்ர காளியம்மன் கோவிலுக்கு மனித வள அமைச்சர் வ சிவகுமார் இன்று சிறப்பு வருகை புரிந்தார்.
மனித வள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி மற்றும் சொக்சோ பாதுகாப்பு நிறுவனத்தின் இயக்குநர் டி. கண்ணன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
பங்கோர் பத்ரகாளியம்மன் கோவில் தலைவர் மோகன்தாஸ் தலைமையில் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு சிறப்பு செய்யப்பட்டது.
இந்த பத்ரகாளியம்மன் கோவில் மேம்பாட்டுக்கு 50,000 வெள்ளியை வழங்குவதாக சிவகுமார் அறிவித்தார்.
இவ்வேளையில் கோவில் நிர்வாகத்தின் சார்பில் அமைச்சர் சிவகுமாருக்கு கோவில் தலைவர் மோகன்தாஸ் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

