
நாட்டில் தொழில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் இலக்கில் TVET தொழில் பயிற்சிகள் குறித்து மனித வள அமைச்சர் வ.சிவகுமார் விளக்கம் அளித்துள்ளார்
• தொழில் துறைக்கு உத்வேகம் அளிக்கக்கூடிய உயர் தாக்கம் கொண்ட விரிவான ஒத்துழைப்பின் வாயிலாக அரசு சார்பு நிறுவனங்கள் (ஜி.எல்.சி.) மற்றும் தனியார் நிறுவனங்களுடன் இணைந்த திவேட் உருமாற்றுத் திட்டம். உதாரணமாகும்
• எண்ணெய் எரிவாயு தொகுப்பு (கிளஸ்டர்)
• வாகனத் தொகுப்புக்கு டிஆர்பி-ஹைக்கோம் மற்றும்
• ஹோட்டல் தொகுப்புக்கு சன்வே ஆகியவை இதில் அடங்கும்.
இணையான சம்பளத்துடன் கூடிய வேலை வாய்ப்புக்கு ஊக்குவிப்பும் வழங்கப்படுகிறது
• சம்பளம் தவிர்த்து ஊக்கத் தொகையாக 17,000 பட்டதாரிகளுக்கு குறிப்பாக திவேட் பட்டதாரிகளுக்கு சொக்சோ திட்டத்தின் மூலம் வழங்க (வெ.4.5 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.
இளைஞர்கள், திவேட் திட்ட பட்டதாரிகள், பாதிக்கப்பட்டத் தரப்பினர் மற்றும் வெட்ரன்களுக்கு அரசு சார்பு நிறுவனங்கள் (ஜி.எல்.சி.) மூலம் 35,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
• தோட்டத் துறை தானியங்கி ஊக்குவிப்புத் திட்டம் மூலம் திறன் பெற்ற ஊழியர்களை பணியமர்த்துதல் (வெ.5 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது.
• நுண்சான்றளிப்பின் மூலம் 30,000 கிக் தொழிலாளர்களின் திறனைப் மேம்படுத்தும் திட்டம் (வெ.4 கோடி). இதில் அடங்கும்.
• எச்.ஆர்.டி.எப். கார்ப். நிதியின் மூலம் தொழிலாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி (வெ.100 கோடி).
ஆகவே இளைஞர்கள் அதிக அளவில் இந்த திட்டங்களில் பங்கேற்கும் படி மனித வள அமைச்சர் சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.

