
பேராக் மாநிலத்தில் மிகவும் புகழ்பெற்ற கால்பந்து கிளப்பாக ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் விளங்குகிறது.
வெட்ரன் கிண்ணக் கால்பந்து போட்டியில் பங்கேற்று பல வெற்றிகளை குவித்து வரும் ஸிக்கோ மரடோனா கிளப் ஆட்டக்காரர்களுக்கு இப்போது புதிய ஜேர்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சுங்கை சிப்புட் வட்டாரத்தில் நவம்பர் 8 ஆம் தேதி ஸிக்கோ மரடோனா கால்பந்து அகாடமி திறப்பு விழா காண்கிறது.
பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் மற்றும் மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் உதவித் தலைவர் ஸ்ரீ சங்கர் தலைமையில் இந்த அகாடமியை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கிறார் என்று ஸிக்கோ மரடோனா கால்பந்து கிளப் தலைவர் அப்பளநாயூடு தெரிவித்தார்.

