

புத்ரா ஜெயா செப் 15-
வரும் 2027 ஆம் ஆண்டில் நடைபெறும் சீ விளையாட்டு போட்டியில் சிலம்பம் இடம் பெறுவதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
மனிதவள அமைச்சர் சிவகுமார் முயற்சியால் பத்து ஆண்டுகளுக்கு பிறகு சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி இடம் பெற்றுள்ளது பெரும் சாதனையாகும்.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பம் வரும் 2027 சீ விளையாட்டு போட்டியில் இடம் பெற செய்வதற்கு அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதன் தலைவர் டாக்டர் சுரேஸ் தெரிவித்தார்.
சீ விளையாட்டு போட்டியில் சிலம்பம் இடம் பெற வேண்டும் என்றால் அரசாங்கத்தின் முழு ஒத்துழைப்பு தேவைபடுகிறது.
அந்த வகையில் இந்திய சமுதாயத்தை பிரதிநிதித்து அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கும் மனித வள அமைச்சர் சிவகுமார் பேருதவி புரிய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
மரியாதை நிமித்தமாக மலேசிய சிலம்பக் கழகத்தின் தலைவர் டாக்டர் சுரேஸ் தலைமையில் மலேசிய சிலம்பக் கழகத்தின் பொறுப்பாளர்கள் மனிதவள அமைச்சர் சிவகுமாரை இன்று நேரில் சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினர்.
வருங்காலத்தில் சிலம்பத்தை உலக அளவில் பிரபலப்படுத்தும் முயற்சியில் மலேசிய சிலம்பக் கழகம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
மலேசிய சிலம்பக் கழகம் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றி பெற மனித வள அமைச்சர் சிவகுமார் பக்கப்பலமாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.