
புத்ராஜெயா, செப். 23-
Supermax Corporation Bhd மற்றும் அதன் துணை நிறுவனங்கள் 2023 செப்டம்பர் 18 ஆம் தேதி முதல் அமெரிக்காவிற்கு (US) கையுறைகளை மீண்டும் ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்க சுங்கத் துறை மற்றும் எல்லைப் பாதுகாப்பு (US CBP ) இந்த நிறுவனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட ரிலீஸ் ஆஃப் ஹோல்டிங் ஆர்டரை (டபிள்யூஆர்ஓ) மாற்றி அமைத்துள்ளதாகவும் அதன் துணை நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் கையுறைகளை இனி தடுத்து வைக்காது என்றும் அறிவித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் கட்டாய உழைப்பு குறிகாட்டிகளை வெற்றிகரமாக மீட்டெடுத்ததைத் தொடர்ந்து இந்த தடை அகற்றுள்ளது.
கட்டாய உழைப்பை தொடர்பில் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மேற்கொள் காட்டி நியாயமான ஆதாரங்களின் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ஆம் தேதி சூப்பர்மேக்ஸ் தயாரிப்புகள் மீது அமெரிக்க சுங்கத் துறை கையுறை ஏற்றுமதிக்கு தடை விதித்தது.
இப்போது இந்த
தடையுத்தரவு வாபஸ் பெறப்பட்டதன் மூலம் மலேசியா மிகவும் நிம்மதியடைகிறது என்று மனித வள அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு தொடர்ந்து பங்களிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
கட்டாய தொழிலாளர் உழைப்பு விவகாரத்தில்
மனிதவள அமைச்சு எப்போதும் உறுதியுடன் இருக்கிறது.
எந்தவொரு நிறுவனமும் சட்டத்தை மீறினால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கட்டாய உழைப்பு நடைமுறையை எதிர்த்துப் போராடுவதில் சமரசம் செய்யப் போவதில்லை என்று மனிதவள அமைச்சு உறுதியுடன் உள்ளது.
தீபகற்ப தொழிலாளர் துறை (JTKSM) மூலம் மனித வள அமைச்சு தொடர்ச்சியான சட்டரீதியான ஆய்வுகளை மேற்கொள்ளும்.
நிறுவனங்கள் சட்டத்திற்கு இணங்குவதை உறுதிப்படுத்த இந்த நடவடிக்கை அவசியம் என்று மனிதவள அமைச்சு தனது அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது