

இந்திய சிறு தொழில் வணிகர்களுக்கு உதவும் வகையில் அரசாங்கம் 50 லட்சம் வெள்ளி கடனுதவி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
பூக்கடை வியாபாரிகளும் இதற்கு விண்ணப்பம் செய்யலாம் என்று கூட்டுறவு தொழில் முனைவோர் துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி இன்று அறிவித்தார்.
டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தலைமையில் இன்று நடைபெற்ற மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை தொடங்கி வைத்த பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார்.