
புத்ரா ஜெயா செப் 24-
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பகாவ் வட்டாரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் கோலா ஜெலாய் தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் அன்னதான மண்டபம் மற்றும் கழிப்பறைகள் கட்டுவதற்கு மனிதவள அமைச்சர் வ சிவகுமார் 65,000 வெள்ளியை வழங்கி பேருதவி புரிந்துள்ளார்.
இந்த தோட்டத்தில் உள்ள மக்களுக்கு ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது.
மானியம் கோரி ஆலய நிர்வாகத்தினர் மனித வள அமைச்சர் சிவகுமாருக்கு கடிதம் எழுதினார்.
இந்த கடிதத்தை பரிசீலனை செய்த அமைச்சர் சிவகுமார் ஆலய மேம்பாட்டு உதவும் வகையில் 65,000 வெள்ளி மானியத்தை அங்கீகரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் முறையாக மனித வள அமைச்சரிடம் இருந்து மிகப்பெரிய மானியம் பெற்றது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
அமைச்சர் சிவகுமார் வழங்கிய மானியத்தை கொண்டு ஆலயத்தில் அன்னதான மண்டபம் மற்றும் கழிப்பறைகள் கட்டப்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
தக்க தருணத்தில் எங்களுக்கு பேருதவி புரிந்த அமைச்சர் சிவகுமாருக்கு அவர்கள் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.