
சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டில் மாபெரும் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு வரும் நவம்பர் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு மேல் கிள்ளான் செட்டி பாடாங்கில் நடைபெறவிருக்கிறது என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பாராயுடு கூறினார்.
மலேசியாவில் இந்துக்கள் அனைவரும் வரும் நவம்பர் 12ஆம் தேதி தீபாவளி பெருநாளை கொண்டாட இருக்கின்றனர்.
இந்த இனிய தீபத் திருநாளை வசதி குறைந்த பி40 மக்களும் கொண்டாடும் வகையில் மாநில அரசு சிறப்பு பற்றுச் சீட்டை வழங்கியிருக்கிறது.
சுமார் 22,000 பேருக்கு 200 ரிங்கிட் மதிப்பிலானப் வழங்கப் படும் இந்தப்ப் பற்றுச் சீட்டுக்காக மாநில அரசு 4.4 மில்லியன் ரிங்கிட்டை மாநில அரசு ஒதுக்கியிருப்பதாக பாப்பாராய்டு தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து கிள்ளானில் மாநில அரசு ஏற்பாடு செய்திருக்கும் மாபெரும் திறந்த இல்ல உபசரிப்புக்கு பொதுமக்கள் அனைவரும் திரளாக வந்து கலந்து கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
கிள்ளானில் நடைபெறும் இந்த திறந்த இல்ல உபசரிப்பில் சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிரூடின் ஷாரி கலந்து கொள்ளவார். அவரோடு மாநிலத்தில் உள்ள ஆட்சி குழு உறுப்பினர்கள் பிரமுகர்கள் என பலரும் இதில் கலந்து கொள்வார்கள் பாப்பாராய்டு கூறினார்.

