மனித மூலதன மாநாட்டை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த மனிதவள அமைச்சர் – எச்ஆர்டி கோர்பை பாராட்டுகிறேன்! மாமன்னர் பெருமிதம்

கோலாலம்பூர் அக் 31-
தேசிய மனித மூலதன மாநாட்டை (NHCCE) 2023 ஏற்பாடு செய்ததன் வெற்றிக்காக மனித வள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் எச்ஆர்டி கோர்பையும் பாராட்ட விரும்புகிறேன் என்று மாட்சிமைத் தங்கிய மாமன்னர் தெரிவித்தார்.

நமது திறமைகளை உலக அரங்கிற்கு உயர்த்தி, நமது மக்களுக்கு வெற்றியடைய ஒவ்வொரு வாய்ப்பையும் வழங்குவதில் நாம் வெற்றி பெறுவோம் என்று மாமன்னர் தெரிவித்தார்.

மனிதவள அமைச்சின் கீழ் இயங்கும் HRD Corp ஏற்பாட்டில்
தேசிய மனித மூலதன மாநாடு மற்றும் கண்காட்சி (NHCCE) Yang Di-Pertuan Agong
Al-Sultan Abdullah Ri’ayatuddin Al-Mustafa Billah Shah Ibni Almarhum Sultan Haji Ahmad Shah Al-Musta’in Billah நேற்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெறும் இந்த கண்காட்சியில் 4,000 க்கும் மேற்பட்ட பேராளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இதனிடையே,
HRD Corp இன் 30ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இந்த ஆண்டு ஒரு பெரிய மற்றும் சிறந்த தேசிய மனித மூலதன கண்காட்சியை ஏற்பாடு செய்ததற்காக எச்ஆர்டி கோர்ப் தலைமை செயல் முறை அதிகாரி டத்தோ வீரா சாகுல் டாவூட் மற்றும் மனித வள மேம்பாட்டுக் கழகத்தில் (HRD Corp) அனைவரையும் பெரிதும் பாராட்டுகிறேன் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது உரையில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles