
கோலாலம்பூர், அக்.31-
பெண்கள் பணித் துறைகளுக்கு மறுபிரவேசம் திட்டம் என்பது மனிதவள அமைச்சு செயல்படுத்தப்படும் ஒரு முயற்சியாகும் என்று மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
தொழில்முறைகளில் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மீண்டும் வேலைக்கு திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.
தன்னம்பிக்கை, திறன்களை தட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்ட தொழில் துறைகளுக்கு இது முக்கிய பங்காற்றுகிறது என்றார் அவர்.
ஊக்கத் தொகைகள் மற்றும் இளம் பெண்கள் வேலைக்குத் திரும்புவதை அரசு உறுதி செய்வது தொடர்பாக SETIU நாடாளுமன்ற உறுப்பினர் தொகை SHAHARIZUKIRNAIN BIN ABD. KADIR எழுப்பிய
கேள்விக்கு பதில் அளிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வேலை வழங்க உறுதி பூண்டுள்ள நிறுவனங்கள்
வேலைக்குத் திரும்ப விரும்பும் பெண்களை பெரிதும் ஊக்குவிக்கிறது.
நிறுவனங்களில் பெண்கள் அதிக அளவில் பணிபுரிய TalentCorp நிறுவனமும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மேலும் கடந்த செப்டம்பர் மாதம் வரை மொத்தம் 3,255 பெண்கள் பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டனர்.
இது தவிர்த்து
தொழிலாளர் சந்தையில் பெண்கள் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர MyFutureJobs மூலம் ஜனவரி மாதத்தில் இருந்து Perkeso அதிகமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

