
நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்துறைகள் பெரியளவில் மேம்பாடு அடைந்துள்ளதாக மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ ஷாஜி ஹமினுடின் பின் ஹருன் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் வரலாற்று நடவடிக்கையாக MIDA எனப்படும் மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஆதரவுடன் 8.9 பில்லியன் ரிங்கிட் முதலீட்டில் 166 செயல் திட்டங்களை இம்மாநிலம் முன்னெடுத்துள்ளது.
இதன் மூலம் 3,597 வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுள்ளன என்று நேற்று தலைநகர் one world ஹொட்டலில் நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் பேசிய ஹமினுடின் கூறினார்.
சீனா, Jiangsu நகரை சேர்ந்த மூத்த தொழில்துறை அமைச்சர் GU wan feng மலேசியாவிற்கு சிறப்பு வருகை புரிந்துள்ளார்.
அவருடன் Jiangsu இளம் தொழில்முனைவோர் சங்கத்தைச் சேர்ந்த 41 பேராளர்களும் வந்துள்ளனர்.
அவர்களை வரவேற்று விருந்தளித்தளிக்கும் விழாவில் மந்திரி பெசார் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நெகிரி செம்பிலான் மாநிலம் முதலீட்டிற்கு சிறந்த தளமாக அமைகிறது. இன்னும் அதிகமான முதலீட்டுகளை அம்மாநிலம் வரவேற்பதாகவும் அவர் பேசினார்.
இவ்விழாவில் நெகிரி செம்பிலான் மாநில செயலாளர் டத்தோ முகமட் ஸாஃபிர் பின் இப்ராஹிம், மாநில முதலீட்டு பிரிவின் தலைமை செயல் அதிகாரி டத்தோ ஹாஜி நஜ்முடின் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.

