
சுங்கை,அக்31:
முகநூலில் தனக்கு எதிராக உண்மையற்ற தகவலை பதிவேற்றம் செய்திருக்கும் நபருக்கு எதிராக தாம் சட்டநடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் என சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் எச்சரிக்கை விடுத்தார்.
சுங்கை சட்டமன்றத்தில் சிலிம் மற்றும் பேராங் சட்டமன்ற உறுப்பினர்கள் சேவை செய்வது போலவும் தாம் எதுவும் செய்யாதது போலவும் கூறும் அந்நபர் ஒருவேளை சுங்கை சட்டமன்ற உறுப்பினர் இல்லையென்றால் இந்த தொகுதியில் இடைத்தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும் என்று மிகவும் அநாகரிகமாகவும் கீழ்தரமான அரசியல் செயலையும் மேற்கொண்டிருக்கும் அந்நபர் பெர்சத்துவின் உறுப்பினர் என்பதையும் சிவநேசன் சுட்டிக்காண்பித்தார்.
மேலும்,முகநூலில் அறிவுக்கு ஒவ்வாத பதிவை முன் வைத்திருக்கும் அந்நபரை காவல்துறை விசாரிக்க வேண்டும்.அவர் மீது சுங்கை காவல் நிலையத்தில் சிவநேசனின் ஆதரவாளர்கள் புகார் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமின்றி,தகவல் தொழில்நுட்பம் அமைச்சின் கீழும் இது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் எடுத்துரைத்த சிவநேசன் சம்மத்ப்பட்ட நபருக்கு வழக்கறிஞர் நோட்டிஸ் அனுப்பப்படும் என்றார்.

