பெபிஸ் இயக்கத்தின் முயற்சியால் உலுசிலாங்கூர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வன்பொருள் நிரலாக்கப் பட்டறை நடைபெற்றது.

உலு சிலாங்கூர் மாவட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான கணினி தொழில்நுட்பம் சார்ந்த மைக்ரோபிட் எனப்படும் வன்பொருள் நிரலாக்கப் பட்டறை கோலா குபு பாரு தமிழ்ப்பள்ளியில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.

இந்நிகழ்ச்சியை சிலாங்கூர் மாநில இந்திய மாணவர் கல்வி மேம்பாடு மற்றும் பரிணாம இயக்கமான PEPIS முன்னெடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இம்மாவட்டத்தை சார்ந்த தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட வேளையில் கணினியால் எவ்வாறான தொழில்நுட்பம் சார்ந்து இயங்குவது,கணினியின் நுட்பம் சார்ந்த திறன் அறிதல் உட்பட மென்தட்டு உருவாக்குதல் மற்றும் பயன்பாடு குறித்தும் அதன் பயிற்சியாளர் திரு.சுந்தர் அவர்களால் மிக சிறப்பாக மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது.

சிறப்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் PEPIS தலைவர் டாக்டர் சுப்பிரமணியம் தனதுரையில் மாணவர்களின் கல்வி பயணத்தில் கணினி பயன்பாடும் அதுசார்ந்த நுட்பவியல் அறிவும் திறனும் இன்றியமையாதது என்றார்.

மேலும்,இந்திய மாணவர்களின் கல்வி வளர்ச்சியிலும் அதன் பரிணாம மேம்பாட்டுடன் உருமாற்றத்திற்கும் தமது இயக்கம் தொடர்ந்து நனிச் சிறப்போடு செயலாற்றும் என்றார்.

உலுசிலாங்கூர் மாவட்டதிற்குட்பட்ட 9 தமிழ்ப்பள்ளிகலிருந்தும் மாணர்வளும் ஆசிரியர்களும் கலந்து கொண்ட இந்த பட்டறையின் நிறைவு நிகழ்வில் கோல குபு பாரு தமிழ்ப்பள்ளி தலைமை ஆசிரியர் ரா.ஜெயமல்லிகா, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் ரா.தாமரை கண்ணன், பத்தாங்காலி தொகுதி இந்து சங்க தலைவர் எம்.முத்துகுமார், உலுசிலாகூர் நகரான்மைக்கழக உறுப்பினர்கள் ப.புவனேஸ்வரன், சு.சின்னய்யா மற்றும் முவாலிம் மாவட்ட நகரான்மைக்கழக உறுப்பினர் சிவா ஆகிய அனைவரும் கலந்து கொண்டானர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles