தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்குரியவர்கள்!!

சுங்கை,பிப்13: சாதனையாளர்களை உருவாக்குவதற்கும் சாதனைக்குரியவர்களாக மாணவர்களை உருமாற்றுவதற்கும் அடிப்படை தமிழ்ப்பள்ளி தான் என்று நினைவுறுத்திய சுங்கை தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு.தியாரன் நம் வீட்டுப்பிள்ளைகள் தங்களின் ஆரம்பக் கல்வியை தமிழ்ப்பள்ளியில் தொடங்குவதை ஒவ்வொரு பெற்றோரும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

தமிழ்ப்பள்ளி என்பது கல்வி கற்கும் இடம் மட்டும் அல்ல.அது நம்மினத்தின் அடையாளம்.நமக்கான இம்மண்ணின் வரலாறு.நாம் நமது பண்பாடு,பாரம்பரியம்,கலையோடு மொழி சார்ந்தும் இம்மண்ணில் 200 ஆண்டுகள் கடந்து வாழ்வதற்கு தமிழ்ப்பள்ளி தான் முதன்மை காரணம் என்பதை நம் நிச்சயம் நினைவுக்கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதேவேளையில்,தமிழ்ப்பள்ளியில் தங்களின் பிள்ளைகளின் எதிர்காலம் நம்பிக்கையான இலக்கில் பயணிக்கும் என்ற நம்பிக்கையில் பிள்ளைகளை பதிவு செய்த பெற்றோர்களுக்கு நன்றியும் தெரிவித்த தலைமையாசிரியர் சுங்கை தமிழ்ப்பள்ளி தொடர்ந்து கற்றல் கற்பித்தலில் வெற்றிகரமான இலக்கை நோக்கி பயணிப்பதாகவும் கூறினார்.

சுங்கை தமிழ்ப்பள்ளியின் மாணவர் தன்னாற்றல் விழாவில் தலைமையுரை ஆற்றுகையில் தியாரன் இதனை குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர் சுங்கை தமிழ்ப்பள்ளி மாணவர்கள் கல்வியோடு புறப்பாட நடவடிக்கைகளிலும் தனித்துவமாய் சிறந்த அடைவுநிலைகளை பதிவு செய்து வருவதாகவும் அவர்களின் சாதனை மாவட்ட,மாநிலம்,தேசியம் கடந்து அனைத்துலக நிலையிலும் வெற்றிகளும் சாதனைகளும் தொடர்வதாக கூறினார்.

இப்பள்ளியின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் பள்ளியின் பெற்றோர்களும்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,முன்னாள் மாணவர் கழகம்,பள்ளியின் வாரியக்குழுவோடு வட்டார பொது இயக்கத்தினரின் ஆதரவும் ஒத்துழைப்பும் பெரும் பங்களிப்பதாக கூறினார்.

முன்னதாக இவ்விழாவிற்கு சிறப்பு வருகை அளித்த வழக்கறிஞர் திரு.இர.சங்கரன் இந்நாட்டில் நமது அடையாளமாய் உயர்ந்து நிற்பது தமிழ்ப்பள்ளியும் ஆலயமும் தான் என்றார்.

தமிழ்ப்பள்ளியே நமது தேர்வாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்ட அவர் நம் வீட்டுப்பிள்ளைகளின் எதிர்காலம் தமிழ்ப்பள்ளியில் தான் உறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

மேலும்,இந்நாட்டில் நாம் ஒற்றுமையாகவும் புரிந்துணர்வோடும் வாழ்தல் வேண்டும்.அப்போதுதான் நமது வாழ்வாதாரமும் உரிமையும் இந்நாட்டில் நிலைக்கொள்ளும் என்றார்.

மிகவும் சிறப்பாக நடைபெற்ற மாணவர் தன்னாற்றல் விழாவில் மாணவர்களின் படைப்புகள் நனிச் சிறப்பாக அமைந்த வேளையில் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சிறந்த நிலையை எட்டிய மாணவர்களோடு சாதனையாளர்களுக்கும் பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles