
கோலாலம்பூர் பிப் 13-
சீனப் புத்தாண்டை முன்னிட்டு மைபிபிபி விலாயா மாநிலம் ஏற்பாட்டில் வசதிகள் குறைந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டன.
செளகிட் கற்றல் மையத்தின் வளாகத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்துடன் இணைந்து வசதி குறைந்த மக்களுக்கு உணவுகள், பானங்கள் மற்றும் ஆங்பாவ் வழங்கப்பட்டது.
சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களுக்கு மைபிபிபி கட்சியின் மூலம் உதவிகள் கிடைத்தன.
விலாயா மாநில மைபிபிபி தலைவரும் மைபிபிபி கட்சியின் இளைஞர் அணி தலைவருமான சத்தியா சுதாகரன் தலைமையில் இந்த நிகழ்வில் பல உயர்மட்ட தலைவர்களும் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

