கல்வி மற்றும் சமூக நலன்களுக்கு மைபிபிபி கட்சி முக்கியத்துவம் வழங்கும்!விலாயா மாநில தலைவர் சத்தியா சுதாகரன் அறிவிப்பு.

கோலாலம்பூர் பிப் 13-
கல்வி மற்றும் சமூக நலன்களுக்கு மைபிபிபி கட்சி தொடர்ந்து முக்கியத்துவம் வழங்கும் என்று விலாயா மாநில மைபிபிபி கட்சியின் தலைவர் சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.

கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி கம்போங் அத்தாப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் விலாயா மாநில மைபிபிபி கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கல்வி மற்றும் சமூக நலன் போன்ற பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டது.

வீடுற்றவர்களுக்கு உதவுவது தொடர்பாக இந்த கூட்டத்தில் உடன்பாடு எட்டப்பட்டது.

மேலும் விலாயா மாநில மைபிபிபி இளைஞர் அணி தலைவர், மகளிர் அணி மற்றும் மாநில பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதங்களையும் சத்தியா சுதாகரன் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles