
ஈப்போ பிப் 13-
பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தலைமையிலான உரிமை கட்சியின் மாபெரும் மக்கள் சந்திப்பு கூட்டம் வரும் மார்ச் 3 ஆம் தேதி ஈப்போ புந்தோங் அருளொளி மன்ற மண்டபத்தில் மாலை 3.00 மணிக்கு நடைபெறுகிறது.
சதீஷ் முனியாண்டி, டேவிட் மார்ஷல் உட்பட பல முக்கிய தலைவர்களும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
இந்தியர்களின் இதயக் குரலாக உதயமாகி இருக்கும் உரிமை கட்சி இப்போது நாடு தழுவிய அளவில் மக்களை சந்தித்து வருகிறது.

