
செபராங் பிறை, பிப் 13-
பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் ஸ்ரீ சங்கர் ஏற்பாட்டில் நடைபெற்ற பினாங்கு மாநில சிறுவர்கள் கிண்ண கால்பந்து போட்டி கடந்த வாரம் இறுதியில் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
இந்த போட்டியில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றன.
இறுதி ஆட்டத்தில் செபராங் பிறை இந்தியர் எஃப்.ஏ. அணி 3-1 என்ற கோல் கணக்கில் பினாங்கு பெந்தர்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் திட்டத்தை வென்றது.
பினாங்கு மாநில இளைஞர் விளையாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் டேனியல் கூய் இந்த போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இந்த போட்டி வெற்றி பெற செபராங் பிறை இந்தியர் அணி நிர்வாகி கமலேஸ்வரன் துணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

