
ஜொகூர் பாரு, பிப் 14- வெடிகுண்டு தாக்குதல் தொடர்பான மிரட்டலை
தாம் நேற்று காலை மின்னஞ்சல் வழி பெற்றதை ஜோகூர் மாநில
போலீஸ் தலைவர் ஆணையர் எம்.குமார் உறுதிப்படுத்தினார்.
அந்த மிரட்டல் கடிதம் ஜோகூர் மாநில போலீஸ் தலைவரின்
அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர்,
புக்கிட் சென்சுமில் உள்ள மெனாரா மஜ்லிஸ் பண்டாராயா ஜோகூர் பாரு
கட்டடத்திற்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே நபரின்
செயல்தான் இது என்றார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்ட கடிதத்தின் அதே முகவரியை
இந்த மிரட்டல் கடிதமும் கொண்டுள்ளது.
ஒரே நபர் இந்த செயலைப்
புரிந்திருக்க வேண்டும் என நாங்கள் சந்தேகிக்கிறோம்.
அந்நபர்
பயன்படுத்திய மின்னஞ்சல் கணக்கு போலியானது என்று அவர்
தெரிவித்தார்.
அந்த மின்னஞ்சலை அனுப்பிய நபரை அடையாளம் காணும் முயற்சியில்
நாங்கள் ஈடுபட்டு வருகிறோம். இந்த விசாரணையில் கிடைக்கும்
முன்னேற்றங்கள் குறித்து பின்னர் நாங்கள் அறிவிப்போம் என்றார் அவர்.

