
பத்துகாவன், பிப் 14-
பினாங்கு மாநிலத்தில் பத்து காவான் தோட்ட அன்னை தேவிஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் அடிக்கல் நாட்டு விழா சில தினங்களுக்கு முன்னர் மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
பத்து காவான் சட்டமன்ற உறுப்பினரும் பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினருமான டத்தோஸ்ரீ ராஜு தலைமையில் இந்த விழா சிறப்பாக நடைபெற்றது.
எனது முன்னாள் மேம்பாட்டு நிறுவனம் இந்த கோவில் கட்டுவதற்கு பத்து லட்சம் வெள்ளியை நன்கொடையாக வழங்கியுள்ளது.
20,000 சதுர அடி நிலத்தில் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கியுள்ளன.
கோவிலை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ள கோவில் நிர்வாகத்தை மனதார வாழ்த்துகிறேன்.
எனது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்று டத்தோஸ்ரீ ராஜூ குறிப்பிட்டார்.

