விமான விபத்தில் இறந்தவர்கள் உடல்கள் மீது சவப்பரிசோதனை

கிள்ளான், பிப் 14- காப்பார், கம்போங் தோக் மூடாவில் நேற்று நிகழ்ந்த இலகு ரக விமான விபத்தில் உயிரிழந்த இருவரின் உடல்கள் மீது இன்று கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் சவப்பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இத்தகவலை உறுதிப்படுத்திய சிலாங்கூர் போலீஸ் தலைவர் டத்தோ ஹூசேன் ஓமார் கான், சவப்பரிசோதனையை மேற்கொள்வதற்கு முன்னர் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு போலீசார் விளக்கமளிப்பர் என்றார்.

அந்த விமானத்தின் விமானியான டேனியல் யீ ஸியாங் கூன் (வயது 30) மற்றும் உதவி விமானியான ரோஷான் சிங் ரைனா (வயது 40) ஆகிய இருவரும் இவ்விபத்தில் உயிரிழந்துள்ளது ஆவணப் பதிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று செய்தியாளர் கூட்டத்தில் ஹூசேன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles